வல்லப்பட்டையின் பயன்பாடு என்ன ?

இத்தாவரம் பாரம்பரிய மருத்துவங்களுக்காகவும், நறுமணப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியம் தயாரிக்கவும் எரோமா சிகிச்சை முறை என்பவற்றுக்கும் பயன்படுத்தப்படுகின்றது. வாசனைத்திரவிய தயாரிப்பில் முன்னணியில் திகழும் பிரான்ஸில் இதற்கான கேள்வி அதிகம் காணப்படுகின்றது.  

வல்லப்பட்டை மரத்தின் தண்டுப் பகுதியில் நடுவில் காணப்படும் பூஞ்சனம் போன்ற ஒருவகை பொருளுக்கே அதிக கேள்வி ஏற்பட்டுள்ளது. அந்தப் பூஞ்சனம் போன்ற பொருள் அதிக வாசனையுடைய ஒரு பொருளாக காணப்படுகின்றது. இதனால் தயாரிக்கப்படும் வாசனைத் திரவியத்துக்கு  உலக சந்தையில் சிறந்த கேள்வி காணப்படுகின்றது.

அண்மைய சில வருடங்களிலேயே  வல்லப் பட்டைக்கான கேள்வி உலக அரங்கில் அதிகரித்துள்ளது. 

No comments:

Post a Comment

Pages